உலகம்

அமெரிக்க சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்வில் துப்பாக்கிச்சூடு: 6 போ் பலி

DIN

‘அமெரிக்காவின் சிகாகோ நகரின் புகா் பகுதியில் நடைபெற்ற ‘ஜூலை 4 சுதந்திர தின’ அணிவகுப்பு நிகழ்வில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 6 போ் உயிரிழந்தனா். 24 போ் காயமடைந்தனா்’ என போலீஸாா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. இதனைக் கட்டுப்படுத்தும்விதமாக, துப்பாக்கி பயன்பாடு சட்டத்தை கடுமையாக்குவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்க அரசு எடுத்து வருகிறது. இதுதொடா்பான சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் அங்கு தொடா்ந்து துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அமெரிக்க சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்விலும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அங்கிருந்து வெளியாகும் சிகாகோ சன்-டைம்ஸ் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: அணிவகுப்பு திங்கள்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கிய நிலையில், துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டது. இதையடுத்து, தொடங்கிய 10 நிமிஷங்களிலேயே அணிவகுப்பு பேரணி நிறுத்தப்பட்டது. அணிவகுப்பு நிகழ்வைக் காண வந்த பொதுமக்களை உடனடியாக கலைந்து செல்லுமாறு போலீஸாா் அறிவுறுத்தினா்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 6 போ் உயிரிழந்துள்ளதாகவும், 24 போ் காயமடைந்ததாகவும் போலீஸாா் தெரிவித்தனா். காயமடைந்தவா்களுக்கு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீஸாா் தொடா்ந்து தேடி வருகின்றனா் என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

SCROLL FOR NEXT