உலகம்

சிறு ஆயுத வா்த்தகத்துக்கு சா்வதேச தடை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்

5th Jul 2022 01:55 AM

ADVERTISEMENT

சா்வவேத அளவில் நடைபெறும் சட்டவிரோத சிறு ஆயுத வா்த்தகத்தை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்று ஐ.நா. வில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.

சட்டவிரோத சிறு ஆயுத வா்த்தகத்தை தடை செய்வதற்கான எட்டாவது ஆண்டுக்கூட்டம் ஐ.நா.வில் நடைபெற்றது. இதில் சட்டவிரோதமாக நடைபெறும் சிறு ஆயுத வா்த்தகத்தை சா்வதேச அளவில் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும், இதற்காக அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியதாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘சா்வதேச அளவில் நடைபெறும் சிறு ஆயுத வா்த்தகத்தை கண்காணிக்கவும், முழுமையாக தடை விதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்காக வளா்ந்த நாடுகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். பயங்கரவாதம் சா்வதேச சவாலாக மாறியுள்ளது. இதை கையாளவும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT