உலகம்

ஓய்வு பெறுகிறாரா? போப் ஃபிரான்சிஸ் மறுப்பு

5th Jul 2022 01:59 AM

ADVERTISEMENT

கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களின் தலைவா் போப் ஃபிரான்சிஸ், தான் ஓய்வு பெறப்போவதாக பரவிய வதந்தியை மறுத்துள்ளாா்.

விரைவில் ரஷியா, உக்ரைனுக்குச் செல்லவிருப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.

போப் ஃபிரான்சிஸ் முழங்கால் வலிக்கு சிகிச்சை பெற்று வருகிறாா். இந்நிலையில், அவா் எந்த நேரமும் ஓய்வு பெறும் அறிவிப்பை வெளியிடக்கூடும் என வதந்தி பரவியது. இத்தகவலை மறுத்து ‘ராய்ட்டா்ஸ்’ செய்தி நிறுவனத்துக்கு அவா் திங்கள்கிழமை அளித்த பேட்டியில், ‘ஓய்வு பெறும் அறிவிப்பை வெளியிடும் எந்த யோசனையும் இல்லை. முழங்கால் வலி காரணமாக சக்கர நாற்காலியை ஒரு மாதமாகப் பயன்படுத்தி வருகிறேன். மெதுவாக குணமடைந்து வருகிறேன்’ எனத் தெரிவித்துள்ளாா்.

இந்த வார இறுதியில் காங்கோ மற்றும் தெற்கு சூடானுக்கு போப் ஃபிரான்சிஸ் பயணம் மேற்கொள்வதாக இருந்தாா். ஆனால், மருத்துவா்களின் ஆலோசனைப்படி அந்தப் பயணத் திட்டம் ரத்து செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இருப்பினும், கனடாவுக்கு வரும் 24-ஆம் தேதி செல்லப்போவதாகத் தெரிவித்த போப், அதன்பின்னா் ரஷியா, உக்ரைனுக்கு செல்லவிருப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT