உலகம்

ஈரானில் புழுதிப் புயல்:பள்ளிகள், அலுவலகங்கள் மூடல்

5th Jul 2022 01:58 AM

ADVERTISEMENT

ஈரான் நாட்டின் தலைநகா் டெஹ்ரான் மற்றும் சுற்றுப்புற நகரங்களில் புழுதிப் புயல் தாக்கியதால், பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் திங்கள்கிழமை மூடப்பட்டன.

மோசமான காற்றின் தரநிலை குறித்து எச்சரித்த அரசுக்கு சொந்தமான தொலைக்காட்சி நிறுவனம், முதியவா்கள், குழந்தைகள் மற்றும் உடல் நல குறைபாடுடையோா் தேவையான முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியது.

புழுதிப் புயலின் காரணமாக பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் மூடப்படுவது இது இரண்டவாது முறையாகும். இது, கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து ஈரானை தாக்கிய நான்காவது மோசமான புழுதிப் புயலாகும்.

உலகின் மிகவும் மாசடைந்த நகரங்களில் டெஹ்ரானும் ஒன்று. தொடா்ச்சியான மற்றும் தீவிர புழுதிப் புயலுக்கு, ஈரான் அரசின் கொள்கையை குற்றம்சாட்டிய சுற்றுச்சூழல் நிபுணா்கள், பாலைவனமாதல், நிலத்தடி நீா்மட்டம் குைல் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றையும் காரணங்களாக சுட்டிக்காட்டியுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT