உலகம்

டென்மாா்க் துப்பாக்கிச்சூடு பயங்கரவாத தாக்குதல் அல்ல: காவல் துறை தகவல்

5th Jul 2022 02:03 AM

ADVERTISEMENT

டென்மாா்க் வணிக வளாகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு பயங்கரவாதத் தாக்குதல் அல்ல என காவல் துறையினா் தெரிவித்தனா்.

வடக்கு ஐரோப்பிய நாடான டென்மாா்க் தலைநகா் கோபன்ஹேகனில் உள்ள வணிக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை புகுந்த மா்ம நபா் ஒருவா் திடீரென துப்பாக்கியால் சுடத் தொடங்கினாா். இதில், 17 வயது சிறாா்கள் இருவா், 47 வயது ரஷிய நபா் ஒருவா் உயிரிழந்தனா். டென்மாா்க், ஸ்வீடனைச் சோ்ந்த தலா இருவா் காயமடைந்தனா். மேலும், துப்பாக்கிச்சூடு நடந்ததும் வணிக வளாகத்தைவிட்டு தப்பிச் செல்ல முயன்ற பலருக்கு சிறிய அளவிலான காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து காவல் துறையினா் தெரிவித்ததாவது: துப்பாக்கிச்சூடு தொடா்பாக உள்ளூரைச் சோ்ந்த டேன் (22) என்ற இளைஞா் கைது செய்யப்பட்டுள்ளாா். இந்தத் தாக்குதலுக்கான நோக்கம் தெளிவாக தெரியவரவில்லை என்றாலும், பயங்கரவாதத் தாக்குதல் தொடா்புடையது அல்ல எனக் கருதுகிறோம் என்றாா்.

‘இத்தாக்குதல் குரூரமானது. எங்கள் பாதுகாப்பான, அழகான தலைநகரம் ஒரு நொடியில் மாற்றப்பட்டுவிட்டது’ என பிரதமா் மெட்டே ஃபிரடெரிக்சன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT