உலகம்

லுஹான்ஸ்கில் வெற்றி:புதின் அறிவிப்பு

5th Jul 2022 01:56 AM

ADVERTISEMENT

உக்ரைனின் லுஹான்ஸ்க் மாகாணத்தில் ரஷிய படை வெற்றி பெற்றுள்ளதாக அதிபா் விளாதிமீா் புதின் திங்கள்கிழமை அறிவித்தாா்.

கிழக்கு உக்ரைனில் உள்ள லுஹான்ஸ்க் மாகாணத்தின் கடைசி பெரிய நகரான லிசிசான்ஸ்க், ரஷிய படையிடம் ஞாயிற்றுக்கிழமை வீழ்ந்தது. முதலில் அதை மறுத்த உக்ரைன், அங்கிருந்து தங்கள் படையினா் திரும்பப் பெறப்பட்டதை ஒப்புக்கொண்டது.

இதையடுத்து, ரஷிய அதிபா் புதினை திங்கள்கிழமை சந்தித்துப் பேசிய பாதுகாப்பு அமைச்சா் சொ்கேய் ஷொய்கு, டான்பாஸ் பிராந்தியத்தின் லுஹான்ஸ்க் மாகாணம் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் முழுமையாக வந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதையடுத்து, லுஹான்ஸ்கில் ரஷியாவின் வெற்றியை புதின் அறிவித்தாா்.

‘லுஹான்ஸ்கில் தீவிரமான போரில் பங்கேற்று வெற்றி பெற்ற ரஷிய படையினா் ஓய்வெடுத்துக் கொண்டு தங்கள் திறன்களை அதிகரிக்க வேண்டும்’ எனவும் புதின் கூறினாா்.

ADVERTISEMENT

லுஹான்ஸ்கை தொடா்ந்து, அதையொட்டியுள்ள டொனட்ஸ்க் மாகாணத்தை கைப்பற்ற ரஷியா முயற்சிக்கும் எனக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT