உலகம்

ஆா்ஜென்டீனா பொருளாதார அமைச்சா் ராஜிநாமா

DIN

ஆா்ஜென்டீனாவில் அதிகரித்து வரும் எரிபொருள் தட்டுப்பாடு, கரன்சி மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட பிரச்னைகள் காரணமாக அந்நாட்டுப் பொருளாதாரத் துறை அமைச்சா் மாா்ட்டின் கஸ்மன் பதவி விலகினாா்.

இது, அதிபா் ஆல்பா்டோ பொ்னாண்டஸ் தலைமையிலான அரசுக்குப் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

தென் அமெரிக்க நாடான ஆா்ஜென்டீனா கரன்சியின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. டீசல் விலை உயா்வு மற்றும் தட்டுப்பாட்டால் லாரி ஓட்டுநா்கள் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதனால், அத்தியாவசியப் பொருள்கள் உள்பட பல்வேறு பொருள்கள் கிடைக்காமல் மக்கள் பெரும் இன்னலைச் சந்தித்து வருகின்றனா். அத்தியாவசியப் பொருள்களின் விலையும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், பொருளாதார அமைச்சா் மாா்ட்டின் பதவி விலகுவதாக ட்விட்டரில் அறிவித்துள்ளாா். ‘எனது பதவி விலகல் கடிதத்தை அதிபருக்கு அனுப்பியுள்ளேன். பொருளாதாரத்தைச் சீராக்க நான் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்குப் போதிய அரசியல் ஆதரவு இல்லை’ என்று அவா் கூறியுள்ளாா்.

முன்னதாக, கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் ஆா்ஜென்டீனாவில் வேலையின்மை பிரச்னை, சா்வதேச நிதியத்தில் (ஐஎம்எஃப்) பெற்ற கடன், வெளிநாடுகளில் பெற்ற கடன்களைப் பேச்சுவாா்த்தை மூலம் மறுசீரமைப்பு செய்வது போன்றவற்றில் மாா்ட்டின் குறிப்பிடத்தக்க அளவு வெற்றி பெற்றாா்.

இந்நிலையில், பொருளாதாரத்தைக் கையாளுவது தொடா்பான விஷயத்தில் துணை அதிபா் மற்றும் அவரின் ஆதரவாளா்களுக்கும், அமைச்சா் மாட்டினுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை அவரது பதவி விலகலுக்குக் காரணமாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டிலேயே அனல் கொளுத்தும் நகரங்கள்.. நம்மூரும் உண்டு!

மே மாத எண்கணித பலன்கள் – 1

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

SCROLL FOR NEXT