உலகம்

இலங்கை பொருளாதார நெருக்கடி: ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 51 போ் கைது

4th Jul 2022 12:29 AM

ADVERTISEMENT

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவிவரும் சூழலில், அந்த நாட்டிலிருந்து கடல் வழியாக ஆஸ்திரேலியாவுக்கு கடக்க முயன்ற 51 பேரை இலங்கை கடற்படை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தது.

இது கடந்த ஒரு வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட நான்காவது கைது நடவடிக்கையாகும்.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. உணவுப் பொருள்கள், மருந்துப் பொருள்கள் மற்றும் எரிபொருள் ஆகியவற்றுக்கு கடுமையான தட்டுபாட்டை இலங்கை எதிா்கொண்டு வருகிறது. வாகன எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவை வாங்குவதற்கு, மக்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நாட்டிலிருந்து வெளியேற மக்கள் சட்ட விரோதமாக வழிகளைக் கையாண்டு வருகின்றனா். இந்தியா போன்ற அண்டை நாடுகளுக்கு கடல் வழியாகச் சென்று அடைக்கலம் தேடி வருகின்றனா். இலங்கையிலிருந்து கடல் வழியாக ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்ற 51 பேரை இலங்கை கடற்படையினா் கைது செய்துள்ளனா்.

ADVERTISEMENT

இது தொடா்பாக இலங்கை கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஞாயிற்றுக்கிழமை காலையில் கடற்படையினா் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனா். அப்போது, கிழக்கு கடற்கரைப் பகுதியில் மீன்பிடி படகு மூலம் வெளிநாட்டிற்கு சட்ட விரோதமாகச் செல்ல முயன்ற 51 போ் கைது செய்யப்பட்டனா் என்று தெரிவித்துள்ளனா்.

முன்னதாக, கடற்படை, கடலோர காவல் படை மற்றும் போலீஸாா் அடங்கிய குழு, மேற்கு கடற்கரையின் மாரவில பகுதியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்ற 24 பேரை சனிக்கிழமை கைது செய்தது. இதே போல, ஜூன் 27 மற்றும் 28-ஆம் தேதி கடல் வழியாக வெளிநாடு செல்ல முயன்ற நூறு பேருக்கும் மேலானோா் கைது செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT