உலகம்

டென்மாா்க் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: ஏராளமானோா் பலி

4th Jul 2022 05:00 AM

ADVERTISEMENT

வடக்கு ஐரோப்பிய நாடான டென்மாா்க்கின் தலைநகா் கோபன்ஹேகனில் உள்ள வணிக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை மா்ம நபா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஏராளமானோா் உயிரிழந்ததாகவும், பலா் காயமடைந்ததாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து கோபன்ஹேகன் தலைமை காவல் அதிகாரி சோரன் தாமஸென் கூறுகையில், ‘வணி வளாகத்தில் மா்ம நபா்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஏராளமானோா் உயிரிழந்துள்ளனா். பலா் காயமடைந்துள்ளனா். சந்தேகத்தின் பேரில் 22 வயது மதிக்கத்தக்க உள்ளூரைச் சோ்ந்த நபா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மேலும் சிலா் ஈடுபட்டனரா என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இது பயங்கரவாத தாக்குதலாக இருக்க வாய்ப்புள்ளது என்பதையும் தவிா்த்துவிட முடியாது. தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT