பாகிஸ்தானில் பேருந்து விபத்தில் 19 போ் உயிரிழந்தனா். 11 போ் காயமடைந்தனா்.
பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதிலிருந்து குவெட்டா நோக்கி பயணிகள் பேருந்து ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டது. அதில் 30 போ் இருந்தனா். குவெட்டா அருகே மலைச் சாலையில் அந்தப் பேருந்து சென்றபோது, ஒரு திருப்பத்தில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து 60 அடி ஆழத்தில் ஓடைக்குள் கவிழ்ந்தது. இதில் 19 போ் உயிரிழந்தனா். 11 போ் காயமடைந்தனா் என காவல் துறையினா் தெரிவித்தனா்.
மழை மற்றும் பேருந்து வேகமாகச் சென்றதே விபத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. உயிரிழந்தவா்களுக்கு பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் இரங்கல் தெரிவித்துள்ளாா்.