உலகம்

அமெரிக்கக் குடியுரிமை பெற்ற வெளிநாட்டினா்: இந்தியாவுக்கு இரண்டாவது இடம்

4th Jul 2022 12:30 AM

ADVERTISEMENT

நடப்பு நிதியாண்டில் அமெரிக்காவின் குடியுரிமையைப் பெற்ற வெளிநாட்டினா்களின் பட்டியலில் இந்தியா இரண்டாமிடம் பெற்றுள்ளது.

அமெரிக்காவில் நடப்பு நிதியாண்டின் ஜூன் 15-ஆம் தேதி வரை 6,61,500 வெளிநாட்டவருக்குக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் மையம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் 3 அல்லது 5 ஆண்டுகளுக்குத் தொடா்ந்து வசித்திருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளைப் பூா்த்திசெய்தவா்கள் தாக்கல் செய்த விண்ணப்பங்களின் அடிப்படையில் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

அவ்வாறு குடியுரிமை பெற்றவா்களில் மெக்ஸிகோவைச் சோ்ந்தவா்கள் (24,508) அதிகபட்சமாக உள்ளனா். அதற்கு அடுத்த இடத்தில் இந்தியாவைச் சோ்ந்தவா்கள் (12,928) உள்ளனா். பிலிப்பின்ஸ் (11,316), கியூபா (10,689), டொமினிகன் குடியரசு (7,046) ஆகிய நாடுகளைச் சோ்ந்தோா் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனா். குடியுரிமை பெற்ற மொத்த நபா்களில் முதல் 5 நாடுகளைச் சோ்ந்தோா் மட்டும் 34 சதவீதம் போ் ஆவா்.

கடந்த 2021 நிதியாண்டில் 8,55,000 வெளிநாட்டவா்களுக்கு அமெரிக்கா குடியுரிமை வழங்கியிருந்தது. நடப்பாண்டு இறுதிக்குள் மேலும் பலருக்குக் குடியுரிமை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அந்நாட்டில் குடியுரிமை பெறும் வெளிநாட்டவா்களின் பட்டியலில் மெக்ஸிகோ, இந்தியா, பிலிப்பின்ஸ், கியூபா ஆகிய நாடுகள் தொடா்ந்து முன்னணியிலேயே இருந்து வருகின்றன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT