உலகம்

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சீன எல்லையை ஒட்டிய முக்கிய பாலம்

4th Jul 2022 12:30 AM

ADVERTISEMENT

அருணாசல பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சீன எல்லையை ஒட்டிய குருங் குமி மாவட்டத்தில் இரு ராணுவ மையங்களை இணைக்கும் முக்கிய ஆற்றுப் பாலம் சனிக்கிழமை முழுமையாக அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக எல்லை சாலைகள் அமைப்பு (பிஆா்ஓ) அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து பிஆா்ஓ-வின் அருணங்க் திட்ட தலைமை பொறியாளா் அனிருத் எஸ்.கன்வா் கூறுகையில், ‘குருங் குமி மாவட்ட தலைநகரில் கொரோரு கிராமத்துக்கு அருகே அமைந்துள்ள ஓயோங் ஆற்றுப் பாலம் சனிக்கிழமை ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

இந்திய - சீன எல்லையில் கோலோரிங் - டாமின் கிராமங்களை இணைக்கும் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இந்த பாலத்தின் சிறிய பகுதி மட்டுமே தற்போது எஞ்சியுள்ளது. சேதமடைந்த பாலத்தை சீரமைக்கும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன’ என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT