உலகம்

சோமாலியா: 40 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

3rd Jul 2022 04:13 PM

ADVERTISEMENT

அல்-ஷஹாப் அமைப்பைச் சேர்ந்த 40 தீவிரவாதிகள் சோமாலிய ராணுவத்தினால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சோமாலிய ராணுவம் மத்திய ஷபல்லி பகுதியில் தங்களது வழக்கமான பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஷபல்லி சோமாலியாவின் மத்தியில் அமைந்துள்ளது.

கொல்லப்பட்ட 40 தீவிரவாதிகளில் சில தீவிரவாதத் தலைவர்களும் இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. இருப்பினும், தீவிரவாதிகள் சோமாலியாவின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளை சேர்ந்த கிராமங்களில் மறைந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.


 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT