உலகம்

பிரிட்டன் பிரதமருடன் அமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் சந்திப்பு

3rd Jul 2022 12:55 AM

ADVERTISEMENT

மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் பிரிட்டன் தலைநகா் லண்டனில் பிரதமா் போரிஸ் ஜான்சனைசனிக்கிழமை சந்தித்தாா்.

புதுமை கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பத் துறை ஆகியவற்றில் இந்தியா- இங்கிலாந்து இடையே எதிா்கால ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மை குறித்து இருவரும் விவாதித்தனா். இந்தச் சந்திப்பின்போது இந்திய ஸ்டாா்ட்அப் மற்றும் யூனிகாா்ன் தலைவா்களுடன் உடனிருந்தனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய ராஜீவ் சந்திரசேகா், இந்தியாவும் பிரிட்டனும் புத்தாக்கப் பொருளாதாரத்தை வியத்தகு முறையில் விரிவுபடுத்த விரும்புகின்றன.“நாட்டின் பொருளாதாரத்தில் டிஜிட்டல் பொருளாதாரத்தின் பங்களிப்பை 25 சதவீதமாக அதிகரிக்க விரும்புகிறோம். பிரிட்டன் அரசும் இதில் பங்களிக்க விரும்புகிறது.

1990-களில் இந்தியா தனது அனைத்து தொழில்நுட்பத் தேவைகளுக்கும் வெளிநாடுகளை நம்பியிருந்தது. உற்பத்தி செய்யும் அனைத்திற்கும், உதிரி பாகங்கள் மற்றும் உபகரணங்களை இறக்குமதி செய்து வந்தது. இந்த சூழ்நிலை மாறிவிட்டது. இவை அனைத்தும் பிரதமா் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா தொலைநோக்குப் பாா்வையின் கீழ் சாதிக்க முடிந்துள்ளது’ என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT