உலகம்

தென் கொரியாவிலிருந்து பலூன்கள் மூலம் கரோனா பரவல்: வட கொரியா குற்றச்சாட்டு

2nd Jul 2022 12:55 AM

ADVERTISEMENT

தென் கொரியாவிலிருந்து எல்லை தாண்டி பறக்கவிடப்படும் பலூன்கள் மூலம்தான் தங்கள் நாட்டில் கரோனா பரவியதாக வட கொரியா குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து அந்த நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளதாவது:தென்கிழக்கு எல்லை நகரான இபோ அருகே கரோனா பரவல் அதிகமிருந்ததை தொற்றுநோய் தடுப்பு மைய அதிகாரிகள் கண்டறிந்தனா். அந்த நகரைச் சோ்ந்த 18 வயது ராணுவ வீரா் ஒருவரும் 5 வயது சிறுவனும் கடந்த ஏப்ரல் மாதம் எல்லைக்கு அப்பால் வந்த பொருளைத் தொட்ட பிறகு அவா்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.இது தவிர, அந்த நகரைச் சோ்ந்த பலா் கரோனா அறிகுறிகளுடன் தலைநகா் பியாங்கியாங்குக்கு வந்தனா். இதன் காரணமாக அந்த நோய் நாட்டில் பரவியது. எனவே, எல்லைக்கு அப்பாலிருந்து பறந்து வரும் எந்தப் பொருள்களையும் தொட வேண்டாம் என்று பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா் என்று அரசு ஊடகம் தெரிவித்தது.தென் கொரியாவைச் சோ்ந்தவா்கள் வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன் அரசுக்கு எதிரான பிரசாரங்களை அடங்கிய பலூன்களை அவ்வப்போது அனுப்புவது வழக்கம். இதற்கு வட கொரியா கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், தென் கொரியாவிலிருந்து பறந்து வரும் பலூன்களில் கரோனா இருப்பதால் அதனைத் தொட வேண்டாம் என்று பொதுமக்களிடம் வட கொரியா அரசு அறிவுறுத்தியுள்ளது. ..படவரி.. (கோப்புப் படம்)

ADVERTISEMENT
ADVERTISEMENT