உலகம்

ஐரோப்பிய நாடுகளில் குரங்கு அம்மை பரவும் ஆபத்து: உலக சுகாதார மையம்

2nd Jul 2022 04:59 PM

ADVERTISEMENT

மாஸ்கோ: ஐரோப்பிய நாடுகளில் குரங்கு அம்மை பரவும் ஆபத்துள்ளதாக உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.

குரங்கு அம்மையால் ஏற்படும் வெடிப்பைக் கட்டுப்படுத்தவும், மேலும் பரவுவதைத் தடுக்கவும், புதிய பாதிப்புகளை  கண்டறியவும் அனைத்து நாடுகளும் எல்லா முயற்சிகளையும் செய்ய வேண்டும் என்று  உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய வாய்ப்பு!

குரங்கு அம்மை நோய், பொதுவாக காட்டு விலங்குகளிடமிருந்து மக்களுக்கு பரவுகிறது. சில ஆப்பிரிக்க நாடுகளில் இந்த நோய் பரவி வருகிறது. இந்த நோய் உடல், சுவாச நீர்த்துளிகள் மற்றும் பிற அசுத்தமான பொருட்கள் மூலம்  பரவுகிறது பொதுவாக காய்ச்சல், சொறி மற்றும் வீங்கிய நிணநீர் இந்த நோயின் அறிகுறிகளாகும்.

ADVERTISEMENT

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, மே 13 முதல் ஜூலை 1 வரை, 51 நாடுகளில் 5,100 மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில், குரங்கு அம்மை நோய் பரவல் மே மாதத்தில் பரவாத நாடுகளில் பரவ தொடங்கியது.

கடந்த இரண்டு வாரங்களில் ஐரோப்பிய நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பா தலைவர் இன்று எச்சரித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT