உலகம்

ஈரானில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள்: பலி 5 ஆக உயர்வு, 49 பேர் காயம்

2nd Jul 2022 03:23 PM

ADVERTISEMENT

 

ஈரானின் தெற்கு ஹோர்முஸ்கான் மாகாணத்தில் அடுத்தடுத்து மூன்று சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதில் 5 பேர் கொல்லப்பட்டனர். 49 பேர் காயமடைந்தனர். 

இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலும், அதைத் தொடர்ந்து சில மணி நேரங்களுக்குப் பிறகு 6.3 ரிக்டர் அளவில் இரண்டு வலுவான நிலநடுக்கங்களும் ஏற்பட்டுள்ளது.  

நிலநடுக்கங்களால் கிராமப்புறங்களில் வீடுகள் சில சேதமடைந்துள்ளதாகவும், பாலங்கள் மற்றும் மேம்பாலங்கள் உடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ADVERTISEMENT

இதையும் படிக்கலாம்: முர்முவுக்கு ஆதரவாகப் பேசிய மம்தா: கேள்வி எழுப்பும் பாஜக

நிலநடுக்கம் பாதித்த பகுதிகளுக்கு ஆம்புலன்ஸ் மற்றும் ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அவசர சேவை செய்தி தொடர்பாளர் மொஜ்தபா கலேடி தெரிவித்துள்ளார்.

மேலும், சில பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதாகவும், அவை சரி செய்யப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஹோர்முஸ்கான் மாகாணத்தின் ரெட் கிரசென்ட் சொசைட்டியின் தலைமை நிர்வாக அதிகாரி மொக்தார் சலாஷூர் கூறுகையில், 

மீட்புப் பணிகள் முடிவடைந்துள்ளதாகவும், மக்கள் அவசரக்கால முகாம்களில் தாங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்குத் தேவையான கூடாரங்கள் மற்றும் உதவிப் பொருள்கள் விநியோகிக்கப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT