உலகம்

ஈரானில் பயங்கர நிலநடுக்கம்: 3 பேர் பலி; 19 பேர் காயம்

2nd Jul 2022 08:48 AM

ADVERTISEMENT

ஈரானில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 3 பேர் உயிரிழந்தனர், மேலும் 19 பேர் படுகாயமடைந்தனர். 

ஈரானின் தென்மேற்கில் பந்தர்அப்பாஸ் எனும் பகுதியில் இருந்து 100 கி.மீ தொலைவில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆகப் பதிவாகியுள்ளது. 

இந்த நிலநடுக்கத்தால் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 19 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்பதால் மீட்புப்பணி நடைபெற்று வருகிறது. 

இந்த நிலநடுக்கத்துக்கு ஒரு நிமிடத்திற்கு முன்னதாக, 5.7 ரிக்டர் அளவில் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT