உலகம்

கொலம்பியா சிறையில் தீ; 53 பேர் பலி

2nd Jul 2022 05:02 PM

ADVERTISEMENT

 

மேற்கு கொலம்பியா நகரமான துலுவாவில் செவ்வாய் கிழமை சிறைச்சாலை கலவரத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ விபத்தினால் 53 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொலம்பியாவின் நீதி அமைச்சர் வில்சன் ரூயிஸின் கூற்றுப்படி செவ்வாய்க் கிழமை இரு சிறைக்கைதிகளுக்கு  நடைப்பெற்ற சண்டையின் காரணமாக அதில் ஒருவர் தீயை கொழுத்தி விட்டிருக்கிறார். 

அந்நாட்டு சுகாதார துறைச் செயலர் வல்லே டெல் காக்கா மரியா கிரிஸ்டினா லெஸ்மெஸ் கூறியதன்படி இளம் சிறைக்கைதி மருத்துவமனையில் உயிரிழந்தார். இன்னொறு சிறைவாசி தீவிர கண்காணிப்பு அறையில் இருக்கிறார். 

ADVERTISEMENT

துலிவா தீயணைப்புத் துறையினர் அந்த தீ விபத்தில் இருந்து 180 சிறைவாசிகளை காப்பாற்றியுள்ளனர். தேசிய சிறைச்சாலை மற்றும் சிறைப் பாதுகாப்பு அதிகாரி டிட்டோ கேஸ்டெல்லானோஸ் உத்தரவுப்படி காயமடைந்தவர்களை உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT