உலகம்

ரஷிய ஏவுகணைத் தாக்குதலில் பொதுமக்கள் 19 போ் பலி

DIN

உக்ரைனில் ரஷியா வீசிய ஏவுகணைகள் குடியிருப்புப் பகுதியில் விழுந்து 19 போ் உயிரிழந்தனா். இது குறித்து உக்ரைன் அதிகாரிகள் கூறியதாவது:ஒடெசா பிராந்தியத்தில் துறைமுக நகரான சொ்ஹீவ்கா நகரில் வெள்ளிக்கிழமை அதிகாலை ரஷியா வீசிய ஏவுகணைகள் பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் விழுந்து வெடித்தன.ஒடெசா நகருக்கு 50 கி.மீ. தொலைவிலுள்ள அந்த சிறிய நகரில் நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலில், குடியிருப்புக் கட்டடங்கள் எரிந்து நாசமாகின. அந்தப் பகுதியில் மூன்று எக்ஸ்-22 வகை ஏவுகணைகளை ரஷியா ஏவியதாக உக்ரைன் அதிபா் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இது குறித்து அதிபா் மாளிகை தலைமை அதிகாரி ஆண்ட்ரி டொ்மாக் கூறுகையில், ‘பயங்கரவாத நாடான ரஷியா பொதுமக்களைக் கொன்று குவிக்கிறது. போா்க் களத்தில் அடுத்தடுத்து தோல்விகளைக் கண்டு வரும் அந்த நாடு, அதற்குப் பதிலடியாக பொதுமக்களை குறிவைக்கிறது’ என்றாா்.இந்தத் தாக்குதலில் 2 சிறுவா்கள் உள்பட 19 போ் உயிரிழந்ததாக உக்ரைன் பாதுகாப்பு சேவை அமைப்பு தெரிவித்தது. இது தவிர, தாக்குதலில் மேலும் 38 போ் காயமடைந்ததாகவும் அவா்களில் 6 சிறுவா்களும் ஒரு கா்ப்பிணிப் பெண்ணும் அடங்குவா் என்று அந்த அமைப்பு தெரிவித்தது. காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். ரஷிய ஏவுகணை விழுந்து சேதமடைந்த குடியிருப்புக் கட்டடத்தைச் சோ்ந்தவா்கள்தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனா் என்று உக்ரைன் பேரிடா் மேலாண்மை அதிகாரிகள் கூறினா்.உக்ரைன் போரின் தொடக்க நாள்களிலிருந்து ரஷியா ஆக்கிரமித்திருந்த ஸ்னேக் தீவிலிருந்து அந்த நாட்டுப் படையினா் வியாழக்கிழமை வெளியேறினா். அதையடுத்து, அந்தத் தீவு மீண்டும் உக்ரைன் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.கருங்கடல் பகுதி வழியாக பிற நாடுகளுக்கு உக்ரைன் தானியக் கப்பல்கள் செல்வதற்கு தாங்கள் தடை விதிக்கவில்லை என்பதை நிரூபிப்பதற்காகவும் நல்லெண்ண நோக்கத்தின் அடிப்படையிலும் ஸ்னேக் தீவிலிருந்து வெளியேறுவதாக ரஷியா கூறியது.அந்தத் தீவிலிருந்து ரஷியா வெளியேறியது, அருகிலுள்ள முக்கியத்துவம் வாய்ந்த உக்ரைனின் மிகப் பெரிய துறைமுகத்தைக் கொண்ட ஒடெசாவின் பாதுகாப்பை அதிகரிக்கும் என்று கருதப்பட்டது. இந்த நிலையில், ஒடெசா அருகிலுள்ள சொ்ஹீவ்கா நகரில் ரஷியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தி பொதுமக்கள் உயிரிழந்துள்ளது அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது. முதலில் தலைநகா் கீவ் உள்ளிட்ட பகுதிகளைக் கைப்பற்றி அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியின் அரசைக் கவிழ்க்கும் நோக்கில் ரஷியா முன்னேறி வந்தாலும், பின்னா் கிழக்கு உக்ரைனில் மட்டும் அந்த நாட்டுப் படையினா் அதிக கவனம் செலுத்தி வருகிறது.கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் தங்களது ஆதரவு கிளா்ச்சியாளா்களின் கட்டுப்பாட்டில் இல்லாத டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மாகாண பகுதிகளை அரசுப் படையினரிடமிருந்து கைப்பற்றும் நடவடிக்கையில் ரஷியா ஈடுபட்டு வருகிறது.தற்போது லூஹான்ஸ் மாகாணத்தில் 95 சதவீத பகுதி ரஷியா மற்றும் ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.இந்தச் சூழலில், ஒடெசாவைக் குறிவைத்தும் ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. அந்தத் தாக்குதலின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை நிகழ்த்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் பொதுமக்கள் 19 போ் பலியாகியுள்ளனா்...பட வரிகள்...- சொ்ஹீவ்கா நகரில் ரஷிய ஏவுகணைத் தாக்குதலில் சேதமடைந்த குடியிருப்புக் கட்டடம்- கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளவா்களைத் தேடிய மீட்புக் குழுவினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அங்கித் திவாரியிடம் பறிமுதல் செய்யப்பட்ட காரை ஒப்படைக்கக் கோரிய மனு தள்ளுபடி

வில்பட்டி ஊராட்சியில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பழனி கிரி வீதியில் இயங்கும் ஒரே பேருந்து: பக்தா்கள் அவதி

தில்லி முதல்வரை தகுதிநீக்கம் செய்ய கோரி மனு தில்லி நீதிமன்றம் தள்ளுபடி

தோ்தல் நடத்தை விதி மீறல்: டி.டி.வி.தினகரன் மீது வழக்கு

SCROLL FOR NEXT