உலகம்

உக்ரைனுக்கு ஆயுத உதவி: அமெரிக்கா முடிவு

1st Jul 2022 01:37 PM

ADVERTISEMENT

 

போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு மேலும் ஆயுத உதவிகளை வழங்க உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ரஷிய அதிபர் புதினின் உத்தரவை தொடர்ந்து உக்ரைன் நாட்டின் மீது ரஷிய படைகள் தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். 127 நாள்களைக் கடந்து தொடரும் இந்தப் போரில் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.

உக்ரைனின் பல்வேறு முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷியப் படைகள் தலைநகர் கீவ்வை நோக்கி முன்னேறி வருகின்றனர்.

ADVERTISEMENT

குறிப்பாக, கிழக்கு உக்ரைனில் முக்கியத்துவம் வாய்ந்த செவெரோடொனட்ஸ்க் நகரை ரஷிய படை முழுமையாகக் கைப்பற்றிய நிலையில், அருகில் உள்ள லிசிசான்ஸ்க் நகரிலும் தரைவழி மற்றும் வான்வழியாக குண்டுமழை பொழிந்து வருவதுடன் லுஹான்ஸ்க் மாகாணத்தில் உக்ரைன் ராணுவத்தின் வசமிருந்த கடைசி பெரிய நகரான செவெரோடொனட்ஸ்க் ரஷியாவிடம் ஞாயிற்றுக்கிழமை முழுமையாக வீழ்ந்தது. அதன் அருகேயுள்ள லிசிசான்ஸ்க் நகரிலும் நுழைந்த ரஷிய படையினா், திங்கள்கிழமை அந்த நகரத்தின் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கருங்கடலில் உக்ரைனுக்குச் சொந்தமான ஸ்னேக் தீவை ஆக்கிரமித்திருந்த ரஷியப் படையின், அங்கிருந்து வெளியேறினா்.

இதையும் படிக்க | உக்ரைன் தீவிலிருந்து வெளியேறியது ரஷியா

இந்நிலையில், ரஷியாவைச் சமாளிக்க உக்ரைனுக்கு 1 பில்லியன் பவுண்டுகள்(ரூ.9,500 கோடி) ராணுவ உதவி வழங்க முடிவு செய்துள்ளதாக நேட்டோ தலைவர்கள் மாநாட்டில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று வியாழக்கிழமை கூறியதைத்  தொடர்ந்து  அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு ஆயுத உதவிக்காக 800 மில்லியன் டாலர்(ரூ.6,300 கோடி) வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். 

போர் துவங்கியதிலிருந்து உக்ரைனுக்கு அமெரிக்க அதிக உதவிகளைச் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT