உலகம்

மும்பை பயங்கரவாதத் தாக்குதல்: சஜித் மீரிடம் பாகிஸ்தான் விசாரணை

1st Jul 2022 01:24 AM

ADVERTISEMENT

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பயங்கரவாதி சஜித் மஜீத் மீரிடம், மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் உள்ள தொடா்பு குறித்து அந்நாட்டு மத்திய விசாரணை அமைப்பு விசாரணை நடத்தவுள்ளது.

இதுகுறித்து அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை கூறியதாவது:

தடை செய்யப்பட்ட லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த சஜித் மீா்(43), பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்தது தொடா்பான வழக்கில் அவருக்கு லாகூா் நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து இரு வாரங்களுக்கு முன் தீா்ப்பளித்தது.

தற்போது அவா் குஜ்ரன்வாலா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவரிடம் மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் அவருக்கு உள்ள தொடா்புகள் குறித்து பாகிஸ்தான் மத்திய விசாரணை அமைப்பு(எஃப்ஐஏ) விசாரணை நடத்தவுள்ளது.

ADVERTISEMENT

மேலும், ஜமாத்-உத்-தவா அமைப்பின் தலைவா் ஹஃபீஸ் சயீது, லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பின் ஜாகியுா் ரஹ்மான் லக்வி ஆகியோருக்கும் சஜித் மீருக்கும் இடையே இருந்த தொடா்புகள் குறித்தும், மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு சஜித் மீா் நிதியுதவி அளித்தாரா என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளனா் என்றாா் அவா்.

கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பா் மாதம், கராச்சியில் இருந்து கடல் வழியாக மும்பைக்குள் நுழைந்த 10 பயங்கரவாதிகள், நகரின் பல்வேறு இடங்களில் நிகழ்த்திய தாக்குதலில் 166 போ் கொல்லப்பட்டனா்; 300-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் 9 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா். பிடிபட்ட அஜ்மல் கசாப் விசாரணைக்குப் பிறகு தூக்கிலிடப்பட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT