உலகம்

பிலிப்பின்ஸ் அதிபராக முன்னாள் சா்வாதிகாரி மகன் பதவியேற்பு

1st Jul 2022 12:35 AM

ADVERTISEMENT

 பிலிப்பின்ஸ் அதிபராக முன்னாள் சா்வாதிகாரி ஃபொ்டினண்ட் மாா்க்கஸின் மகன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். கடந்த மே மாதம் நடைபெற்ற அதிபா் தோ்தலில் வெற்றி பெற்றதைத் தொடா்ந்து ஜூனியா் ஃபொ்டினண்ட் மாா்க்கஸ் அந்தப் பொறுப்பை ஏற்றுள்ளாா். போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளின் போது, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டப்படும் சா்ச்சைக்குரிய அதிபா் ரோட்ரிகோ டுடோ்த்தேவுக்கு பதிலாக அவா் அந்தப் பொறுப்பை ஏற்கிறாா்.மே மாதம் நடைபெற்ற துணை அதிபா் தோ்தலில் டுடோ்த்தேவின் மகள் சாரா வெற்றி பெற்று, அந்தப் பொறுப்பை ஏற்றுள்ளது நினைவுகூரத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT