உலகம்

மலேசியாவில் புதிதாக 5,439 பேருக்கு தொற்று: 10 பேர் பலி 

28th Jan 2022 12:01 PM

ADVERTISEMENT


கோலாலம்பூர்: மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,439 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 28,50,408 ஆக அதிகரித்துள்ள என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதிதாக தொற்று பாதித்தவர்களில் வெளியில் வந்தவர்களில் 332 பேரும், மற்ற 5,107 பேர் அந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்று அமைச்சகத்தின் இணையதள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தென்கிழக்கு ஆசிய நாட்டில் தொற்றுநோயால் மேலும் 10 உயிரிழந்துள்ளதால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 31,940 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 4,409 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 27,70,663 ஆக அதிகரித்துள்ளது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க | உலகளவில் கரோனா பாதிப்பு 36.69 கோடியைத் தாண்டியது

தற்போது, ​​மலேசியாவில் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 47,805 ஆக உள்ளது. அவர்களில் 124 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 70 பேர் ஆக்சிஜன் தேவைப்படுகிறார்கள்.

நேற்று வியாழன் மட்டும் 2,03,613 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாகவும், நாட்டின் மக்கள் தொகையில் 79.8 சதவிகிதம் பேர் முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளதாகவும், 78.7 சதவிகிதம் பேர் இரு தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டுள்ளதாகவும், 35.3 சதவிகிதம் பேர்  பூஸ்டர் தடுப்பூசி பெற்றுள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT