உலகம்

உலகளவில் 52.8% மக்களுக்கு 2 தவணை தடுப்பூசி

28th Jan 2022 12:08 PM

ADVERTISEMENT

உலகம் முழுவதும் இதுவரை 413 கோடி பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

உலகம் முழுக்க  கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தொற்றைக் கட்டுப்படுத்து நோக்குடன் கொவாக்ஸின் , கோவிஷீல்ட் , ஸ்புட்னிக் , போன்ற தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக ஒமைக்ரான் தொற்று பரவலுக்குப் பின் தடுப்பூசிகள் செலுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இரண்டு தவணையாக வழங்கப்படும் கரோனா தடுப்பூசிகளை உலகம் முழுவதும் இதுவரை 413 கோடி பேர் எடுத்துக்கொண்டிருப்பதாகவும் இது ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 52.8 சதவீதம் என தினசரி கரோனா அறிக்கையில் தெரிய வந்துள்ளது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க | பிரேசில்: கடந்த 24 மணி நேரத்தில் 2,28,954 பேருக்கு தொற்று

மேலும், உலகம் முழுவதும் தற்போது வரை 991 கோடி  தடுப்பூசிகள்  செலுத்தப்பட்டுள்ளன.

 இந்தியாவில் இதுவரை 164.44 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

Tags : covid vaccine
ADVERTISEMENT
ADVERTISEMENT