உலகம்

ஒமைக்ரான் பாதிப்பு குறித்த ஆய்வில் கிடைத்த அதிர்ச்சித் தகவல்

27th Jan 2022 01:39 PM

ADVERTISEMENT


லண்டன்: கரோனா பேரிடருக்கு மத்தியில், ஒமைக்ரான் என்ற வார்த்தை மேலும் அச்சமூட்டி, தற்போது, அதன் தீவிரம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று ஓரளவுக்கு நிம்மதியை அளித்தாலும் கூட, இன்னமும் அது தொடர்பான ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஒமைக்ரான் பாதிப்பு நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்துமா? ஏற்கனவே கரோனா பாதித்ததால் ஏற்பட்ட அல்லது கரோனா தடுப்பூசி செலுத்தியதால் ஏற்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக ஒமைக்ரான் பாதிப்பு தீவிரமடையவில்லையா என்பது குறித்த ஆய்வுகளும் நடந்துகொண்டே இருக்கின்றன.

இதையும் படிக்க.. வெள்ளையா, கருப்பா, ஒல்லியா, குண்டா இருக்கோம்னு கவலையா?

இந்த நிலையில், இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு ஆய்வில் கிடைத்திருக்கும் தகவல் என்னவென்றால், ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 65 சதவீதத்தினர் ஏற்கனவே கரோனா பாதித்தவர்கள் என்பதுதான் அது. அதாவது, மூன்றில் ஒரு பகுதியினர் ஏற்கனவே கரோனா பாதித்தவர்கள்.

ADVERTISEMENT

இம்பெரியல் லண்டன் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், ஒமைக்ரான் பாதித்தவர்கள் 3 பேரில் இரண்டு பேர் ஏற்கனவே கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்திருப்பது என்னவென்றால், ஏற்கனவே கரோனா பாதித்தவர்களுக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட அதிக அபாயங்கள் இருப்பதாகக் கருதப்படுகிறது.

அதேவேளையில், இரண்டாவது முறை பரிசோதனை செய்யும் போது உண்மையிலேயே அவர்களுக்கு புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டதா அல்லது, ஏற்கனவே பாதித்த கரோனாவின் மிச்சங்கள், தற்போது செய்யப்படும் பிசிஆர் கருவிகள் மூலம் புதிய பாதிப்பாகக் காட்டப்படுகிறதா என்பதையும் ஒரு சோதனைக்குள்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT