உலகம்

பாகிஸ்தான்: கரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 90 ஆயிரத்தைக் கடந்தது

27th Jan 2022 12:20 PM

ADVERTISEMENT

 

ஒமைக்ரான் பரவலுக்கு மத்தியில், பாகிஸ்தானில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக என்.சி.ஓ.சி தகவல் வெளியிட்டுள்ளன. 

இதற்கிடையில், கடந்த சில நாட்களில் தினசரி எண்ணிக்கையில் சிறிதளவு சரிவு ஏற்பட்டிருந்ததைத் தொடர்ந்து, தற்போது தொடர்ந்து எட்டாவது நாளாக 10 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 63,272 பேரின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில், 7,539 பேருக்கு புதிதாக தொற்று பரவியுள்ளது. இதையடுத்து பாதிப்பு விகிதம் 11.91 ஆக உள்ளது. மொத்த பாதிப்பு 1.393 மில்லியனாக உயர்ந்துள்ளது. 

ADVERTISEMENT

தொற்று காரணமாக ஒரேநாளில் 25 பேர் பலியாகி உள்ளதையடுத்து, மொத்தம் இதுவரை 29,162 ஆக உயிரிழந்துள்ளனர். சிகிச்சையில் 91,854 உள்ளனர். மேலும், தொற்று பாதித்த 1,240 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளனர். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 1,836 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளன. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT