உலகம்

ஒமைக்ரான் பிளாஸ்டிக் பரப்புகளில் 8 நாளும், தோலில் 1 நாளும் உயிர்வாழும்: ஆய்வில் பரபரப்பு தகவல்

27th Jan 2022 11:27 AM

ADVERTISEMENT


   
டோக்கியோ: ஒமிக்ரான் வைரஸ் பிளாஸ்டிக் பரப்புகளில் ஒரு வாரத்திற்கு மேல் 8 நாள்கள் உயிர் வாழும், தோலில் 21 மணி நேரத்துக்கு மேல் உயிர்வாழும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஜப்பானில் உள்ள கியோட்டோ ப்ரிபெக்சுரல் யுனிவர்சிட்டி ஆஃப் மெடிசின் ஆராய்ச்சியாளர்கள், வூஹான் நகரத்தில் உருவான சார்ஸ்-கொவிட்-2  மற்றும் பல்வேறு மாறுபாடுகள் அடைந்து வரும் வைரஸ்களுக்கு இடையே உள்ள சுற்றுச்சூழல் நிலைத்தன்மையின் வேறுபாடுகளை ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் ஒமைக்ரான் தொற்று தோலில் 21 மணி நேரத்துக்கு மேலாகவும், பிளாஸ்டிக் பரப்புகளில் 8 நாள்களுக்கு மேலாக உயிர்வாழும் என்றும், இது மற்ற தொற்றுகளுடன் ஒப்பிடும்போது வேகமாக பரவுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆல்பா, பீட்டா, டெல்டா மற்றும் ஒமைக்ரான் வகை தொற்றுகள் பிளாஸ்டிக் மற்றும் தோல் பரப்புகளில் இரண்டு மடங்கு நீண்ட உயிர்வாழ்வை என்பவை தெரியவந்துள்ளது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க | இந்தியாவின் தடுப்பூசி திட்டத்துக்கு தொடா் ஆதரவு: ஐ.நா. செய்தித் தொடா்பாளா் தகவல்

கவலைக்குரிய மாறுபாடுகளாக அடையாளம் காணப்பட்டுள்ள உருமாறிய கரோனா தொற்றுகள், அவற்றின் சுற்றுச்சூழல் ஸ்திரத்தன்மை தொடர்பு பரிமாற்றத்தின் அபாயத்தை அதிகரிக்கும் மற்றும் அவற்றின் பரவலுக்கு பங்கு அளிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கரோனா தொற்றுகளின் பிளாஸ்டிக் மேற்பரப்புகள் மீது சராசரி உயிர்வாழ்வு நேரமானது, ஆல்பா 56 மணி நேரம், காமா 191.3, பீட்டா 59.3, டெல்டா 156.6, ஒமைக்ரான் 191.3 மணி நேரம் என 114 மணி நேரம் உயிர் வாழும் எனவும், தோலில் ஒமைக்ரான்  21.1 மணி நேரத்துக்கு மேலாகவும், ஆல்பா 19.6, பீட்டா 19.1, காமா 11, டெல்டா 16.8 மணி நேரமும் உயிர்வாழ்கின்றன என்று அவர்கள் தெரிவித்தனர்.

ஆல்பா மற்றும் பீட்டா வகை தொற்றுகளுக்கு இடையே உயிர்வாழும் நேரங்களில் குறிப்பிடத்தக்க வேறுபாடு இல்லை, மேலும் அவை ஒத்த சுற்றுச்சூழல் நிலைத்தன்மையைக் கொண்டிருந்தன, இது முந்தைய ஆய்வுகளின் முடிவுகளுடன் ஒத்துப்போவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

உலகம் முழுவதும் வேகமாக பரவி பாதிப்பை ஏற்படுத்தி ஒமைக்ரான் குறித்த அச்சுறுத்தல் பெரும் கவலையாக உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT