உலகம்

பிரான்ஸ்: ஒரே நாளில் 5 லட்சம் பேருக்கு கரோனா

27th Jan 2022 10:49 AM

ADVERTISEMENT

 

பாரீஸ்: பிரான்சில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,77,30,556 ஆக அதிகரித்துள்ளது. 

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 5,01,635 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,77,30,556 -ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இதையும் படிக்க | இந்தியாவின் தடுப்பூசி திட்டத்துக்கு தொடா் ஆதரவு: ஐ.நா. செய்தித் தொடா்பாளா் தகவல்

இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 364 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். இத்துடன், அந்த நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,29,747-ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

அங்கு இதுவரை 51,62,757 பேர் கரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர்; 1,24,38,052 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 3,760 பேரின் நிலைமை நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT