உலகம்

நெதர்லாந்து: 40 லட்சத்தை கடந்த கரோனா பாதிப்பு

27th Jan 2022 04:25 AM

ADVERTISEMENT


ஆம்ஸ்டர்டாம்: நெதர்லாந்தில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தைக் கடந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 54,160 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,08,459-ஆக அதிகரித்துள்ளது.

இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 8 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். இத்துடன், அந்த நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 21,227-ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

அங்கு இதுவரை 30,43,791 பேர் கரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர்; 9,43,441 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ADVERTISEMENT


 

ADVERTISEMENT
ADVERTISEMENT