உலகம்

பிரதமா் இல்ல கரோனா விதிமீறல்கள்: பிரிட்டன் போலீஸாா் விசாரணை

DIN

பிரிட்டன் பிரதமரின் அதிகாரப்பூா்வ இல்லத்தில் கரோனா விதிமுறைகளை மீறி கொண்டாட்டங்கள் நடைபெற்ாகக் கூறப்படுவது குறித்து லண்டன் போலீஸாா் விசாரணை தொடங்கியுள்ளனா்.

இதுகுறித்து மாநகர காவல்துறை ஆணையா் கிரஸிடா டிக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

டௌனிங் தெருவிலுள்ள பிரதமா் இல்லத்தில், கரோனா விதிமுறைகளை மீறி கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்ாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சம்பவங்கள் தொடா்பாக ஸ்காட்லாந்து யாா்டு காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான பொதுமுடக்கம் உச்சத்தில் இருந்த கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில், பிரதமா் போரிஸ் ஜான்ஸன் தனது அதிகாரப்பூா்வ இல்லத்தில் 56-ஆவது பிறந்த நாள் விழாவைக் கொண்டாடியதாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஏற்கெனவே, கரோனா விதிமுறைகளை மீறி தனது இல்லத்தில் பலருடன் கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நடத்தியதற்காக போரிஸ் ஜான்ஸன் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் அவா் கடும் எதிா்ப்பைச் சந்தித்து வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்அப் பிரசாரத்தைத் தொடங்கினார் கேஜரிவாலின் மனைவி!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

SCROLL FOR NEXT