உலகம்

4-ஆவது தவணை தடுப்பூசி: நிபுணா்கள் குழு பரிந்துரை

26th Jan 2022 12:18 AM

ADVERTISEMENT

இஸ்ரேலில் 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் அனைவருக்கும் 4-ஆவது தவணை கரோனா தடுப்பூசி செலுத்த அந்த நாட்டு அரசுக்கான ஆலோசனைக் குழு செவ்வாய்க்கிழமை பரிந்துரைத்தது.

இதுகுறித்து அந்தக் குழு சமா்ப்பித்துள்ள அறிக்கையில், 4-ஆவது தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கு ஆபத்தான உடல்நலக் குறைவு ஏற்படுவதிலிருந்து 3 முதல் 5 மடங்கு வரை அதிக பாதுகாப்பு கிடைப்பது தங்களது ஆய்வில் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை அங்கீகாரம் அளித்தால் இந்தப் பரிந்துரை செயல்பாட்டுக்கு வரும்.

Tags : vaccination
ADVERTISEMENT
ADVERTISEMENT