உலகம்

உலகளவில் 410 கோடி மக்களுக்கு 2 தவணை தடுப்பூசி

25th Jan 2022 11:44 AM

ADVERTISEMENT

உலகம் முழுவதும் இதுவரை 410 கோடி பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

உலகம் முழுக்க  கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தொற்றைக் கட்டுப்படுத்து நோக்குடன் கொவாக்ஸின் , கோவிஷீல்ட் , ஸ்புட்னிக் , போன்ற தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக ஒமைக்ரான் தொற்று பரவலுக்குப் பின் தடுப்பூசிகள் செலுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இரண்டு தவணையாக வழங்கப்படும் கரோனா தடுப்பூசிகளை உலகம் முழுவதும் இதுவரை 410 கோடி பேர் எடுத்துக்கொண்டிருப்பதாகவும் இது ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 52.5 சதவீதம் என தினசரி கரோனா அறிக்கையில் தெரிய வந்துள்ளது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க | உலகளவில் கரோனா பாதிப்பு 35.56 கோடியைக் கடந்தது

மேலும் கரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் 7.16 கோடி பேர் பாதித்திருப்பதாகவும் 8.68 லட்சம் பேர்  உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் 3.91 கோடி பேர் கரோனாவால் பாதிப்படைந்திருக்கிறார்கள். 4.89 லட்சம் பேர் நோயின் தீவிரத்தில் பலியாகியிருக்கிறார்கள்.

உலகம் முழுவதும் தற்போது வரை 989 கோடி  தடுப்பூசிகள்  செலுத்தப்பட்டுள்ளன.

ஒமைக்ரான் தொற்று பரவி வரும் சூழலில் இந்தியாவில் இதுவரை 162.92 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT