உலகம்

ரஷியாவில் ஒரேநாளில் 67,809 பேருக்கு கரோனா: 681 பேர் பலி

25th Jan 2022 03:38 PM

ADVERTISEMENT

 

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 67,809 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு 11,241,109 ஆக உயர்ந்துள்ளது. 

நாட்டில் நாளுக்கு நாள் கரோனாவின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒருநாள் பாதிப்பு 67 ஆயிரத்தைக் கடந்த நிலையில், நேற்றைய பாதிப்பு 65,109 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

கடந்த 24 மணி நேரத்தில் மாஸ்கோவில் அதிகபட்சமாக 18,935 பேருக்கும், அதைத் தொடர்ந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 9,722 பேருக்கும், மாஸ்கோ பிராந்தியத்தில் 5,769 பேருக்கும் புதிதாக தொற்று பரவியுள்ளது. 

ADVERTISEMENT

கடந்த 24 மணி நேரத்தில், கரோனா தொற்றுக்கு 681 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டின் மொத்த இறப்பு எண்ணிக்கை 327,448 ஆக உள்ளது.

மேலும் ஒரேநாளில் 26,404 பேர் வீடு திரும்பிய நிலையில், இதுவரை 10,071,740 பேர் நோயிலிருந்து குணமடைந்தனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT