உலகம்

இந்தோனேசியா: இரு தரப்பினர் மோதலில் 19 பேர் பலி

25th Jan 2022 11:36 AM

ADVERTISEMENT

இந்தோனேசியாவில் இரு தரப்பினர்கள் மோதிக் கொண்டதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தோனேசியாவின் மேற்கு பபுவா மாகாணத்தில் இரவுக் கொண்டாடத்தின்போது இரு தரப்பினருக்கு ஏற்பட்ட திடீர் மோதலில் 19 பேர் வரை பலியாகியுள்ளனர்.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் பேசிய ஆடம் எர்விந்தி , ‘ திங்கள்கிழமை இரவு சோராங் நகரில் உள்ள கேளிக்கை விடுதியில் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. தாக்குதலின்போது விடுதியில் தீ விபத்து ஏற்பட்டதில் 19 பேர் பலியாகியுள்ளனர். காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது’ எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT