உலகம்

பத்திரிகையாளரை ஒருமையில் திட்டிய அதிபர் பைடன்; வைரல் விடியோ

DIN

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பத்திரிகையாளர் ஒருவரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திட்டிய விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். 

அப்போது, ரஷ்ய ராணுவக் கட்டமைப்பு மற்றும் படையெடுப்புக்கான சாத்தியம் குறித்து ஐரோப்பிய நட்பு நாடுகளுடனான கூட்டம், 'மிக நல்ல சந்திப்பு' என்று கூறிய பைடன், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்து ஐரோப்பிய தலைவர்களிடமும் ஒருமித்த கருத்து உள்ளதாகக் கூறினார். 

அடுத்து, விலைவாசி உயர்வு விதிகளில் திருத்தம் கொண்டுவருவது குறித்து பேசிய பைடனிடம், அமெரிக்காவின் ஃபாக்ஸ் நியூஸ்  பத்திரிகையாளர் ஒருவர், 'அமெரிக்காவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகரித்துள்ளது, பணவீக்கம் என்பது அரசியல் பொறுப்பா?' என்று கேள்வி எழுப்பினார்.

அவரின் கேள்விக்கு பதில் அளித்த பைடன், இது மிகப்பெரிய சொத்து..அதிக பணவீக்கம்' என்று கூறி ஒருமையில் திட்டி முணுமுணுத்துள்ளார். இது அங்குள்ள மைக்ரோபோனில் பதிவானது. பைடனின் இந்த விடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT