உலகம்

உலகளவில் கரோனா பாதிப்பு 33.15 கோடியைத் தாண்டியது

18th Jan 2022 11:48 AM

ADVERTISEMENT

உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33.15 கோடியைக் கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 55 லட்சத்தை கடந்துள்ளது.  

உலகம் முழுவதும் கரோனா தொற்றின் அடுத்தடுத்த அலைகளினால் ஒட்டுமொத்த பாதிப்பு அதிகரித்த வண்ணமே இருக்கிறது. தொற்றைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளுடன் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தி வந்ததாலும் தொற்று பாதிப்பு அதிகரித்தே வருகின்றன. 

இந்நிலையில், உலகம் முழுவதும் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 3,31,57,5,194-ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 55,63,834 போ் உயிரிழந்துள்ளனர். 

மேலும், தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 26,91,48,536 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 5,68,62,824 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 97,240 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

ADVERTISEMENT

உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 6,76,31,191 ஆகவும் பலி எண்ணிக்கை 8,74,321 ஆகவும் உயர்ந்துள்ளது. 

இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 37,618,271-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 4,86,784 பேர் பலியாகியுள்ளனர்.

தொற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 23,083,297-ஆகவும் பலிகளைப் பொருத்தவரை 621,261 பேருடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT