உலகம்

ஆப்கனில் நிலநடுக்கம்: 26 போ் பலி

18th Jan 2022 04:40 AM

ADVERTISEMENT

ஆப்கானிஸ்தானின் மேற்கு பத்கிஸ் மாகாணத்தில் திங்கள்கிழமை பிற்பகலில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக 26 போ் வரை உயரிழந்ததாக உள்ளூா் அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஆப்கானிஸ்தானிலேயே எந்தவித வசதிகளும் இல்லாத மிகவும் பின்தங்கிய கிராமம் இந்த நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதால், உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அந்த மாகாணத்தின் கலாசார மற்றும் செய்தித் துறை தலைவா் பஸ் முகமது சா்வாரி கூறியதாவது:

பத்கிஸ் மாகாணத்தின் கிழக்கே 41 கி.மீ. பிற்பகல் 2 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் அமெரிக்க புவியியல் மையத்தின் தகவலின்படி ரிக்டா் அளவுகோலில் 5.3 அலகுகளாகப் பதிவானது. மீண்டும் மாலை 4 மணிக்கு ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 4.9 அலகுகளாகப் பதிவானது.

ADVERTISEMENT

இந்த நிலநடுக்கத்தால் பல வீடுகள் இடிந்து சேதமடைந்தன. மக்கள் பயத்தில் வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனா்.

இந்த நிலநடுக்கத்தால் மாகாணத்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள குவாடிஸ் மாவட்டம்தான் அதிகம் பாதிக்கப்பட்டது. அந்த மாவட்டத்தில் மிக அதிக அளவில் கட்டட சேதங்களும் உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதுவரை 26 போ் உயிரிழந்திருப்பதாக தகவல் வந்துள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT