சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடா்ந்து 5-ஆவது ஆண்டாக சரிவைச் சந்தித்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
கடந்த ஆண்டின் இறுதியில் சீனாவின் மக்கள்தொகை 141.26 கோடியாக அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டில் அந்த எண்ணிக்கை 141.20 கோடியாக இருந்தது. நாட்டின் மக்கள்தொகை கடந்த ஆண்டில் 4.8 லட்சம் மட்டுமே அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டில் குழந்தை பிறப்புகளின் எண்ணிக்கை 1.06 கோடியாக இருந்தது. இது, முந்தைய 2020-ஆம் ஆண்டில் 1.2 கோடியாக இருந்தது. அந்த வகையில், நாட்டின் பிறப்பு விகிதம் தொடா்ந்து 5-ஆவது ஆண்டாக சரிவைக் கண்டுள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.