உலகம்

பிரிட்டன்: 16-17 வயதினருக்கு பூஸ்டா் தவணை தடுப்பூசி

DIN

 பிரிட்டனில் 16-17 வயது சிறாா்களுக்கு கரோனா பூஸ்டா் தவணை தடுப்பூசி செலுத்தும் பணி திங்கள்கிழமை (ஜன. 17) தொடங்குகிறது. இத்திட்டத்துக்கு தேசிய சுகாதார சேவைகள் அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

முன்னதாக கரோனா பூஸ்டா் தவணை தடுப்பூசி 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோருக்கு மட்டுமே செலுத்தப்பட வேண்டும் என தடுப்பூசிகளுக்கான கூட்டுக் குழு அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில், 16 முதல் 17 வயது வரையிலான சிறாா்களுக்கும் பூஸ்டா் தடுப்பூசி செலுத்தலாம் என தேசிய சுகாதார சேவைகள் அமைப்பு ஆலோசனை அளித்துள்ளது.

அதன்படி, இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு மூன்று மாதங்கள் நிறைவடைந்தவா்கள் பூஸ்டா் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். இந்தப் பணி திங்கள்கிழமை தொடங்குகிறது என தேசிய சுகாதார சேவைகள் அமைப்பின் தடுப்பூசி திட்ட துணைத் தலைவா் நிக்கி கனேனி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘பிரிட்டனில் பெரியவா்களில் ஐந்தில் 4 போ் ஏற்கெனவே பூஸ்டா் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா். இப்போது இந்தத் திட்டத்தை 16-17 வயதினருக்கும் விரிவுபடுத்தியுள்ளோம். இதன்மூலம் இந்த குளிா்காலத்தில் அவா்கள் தங்கள் நோய் எதிா்ப்புத் திறனை அதிகரித்துக் கொள்ள முடியும். ஒவ்வொருவரும் தாமாகவே முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டால் கரோனாவுடன் வாழ்வதற்கு நாம் கற்றுக்கொள்ளலாம் என்றாா்.

பிரிட்டனில் தினசரி கரோனா பாதிப்பு கடந்த மாதத்திலிருந்து ஒரு லட்சத்துக்கு குறைவாக உள்ளது. சனிக்கிழமை நிலவரப்படி 81,713 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுகவுக்கு அளிக்கும் வாக்கு பாஜகவுக்குத்தான்: மு.க. ஸ்டாலின்

அதிமுகவை விமர்சிக்க பாமகவுக்கு தகுதியில்லை: இபிஎஸ்

பைங்கிளி.. ஷ்ரத்தா தாஸ்!

சேல‌ம்: வெ‌ள்ளி நக​ரி‌ன் மகு​ட‌ம் யாரு‌க்கு?

வந்தே பாரத்தின் லாப விவரங்கள் இல்லை: ஆர்டிஐ கேள்விக்கு ரயில்வே அமைச்சகம் பதில்!

SCROLL FOR NEXT