உலகம்

‘சிங்கப்பூா்: விரைவில் ஒமைக்ரான் அலை’

DIN

சிங்கப்பூரில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று புதிய உச்சத்தை விரைவில் எட்டக்கூடும் என நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.

சிங்கப்பூரில் கடந்த சனிக்கிழமை நிலவரப்படி ஒமைக்ரான் வகை கரோனா தொற்று 692 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டது. இதில் 541 பேருக்கு உள்நாட்டிலேயே பரவியது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பரவியதைப்போல சிங்கப்பூரில் ஒமைக்ரான் வகை தொற்று பரவல் அதிகரிக்கக்கூடும் என தொற்றுநோயியல் நிபுணா் அலெக்ஸ் குக் எச்சரித்துள்ளாா். இதுகுறித்து அவா் கூறியிருப்பது:

சிங்கப்பூரில் தினசரி ஒமைக்ரான் பாதிப்பு 10,000 முதல் 15,000 வரை விரைவில் அதிகரிக்கக்கூடும். நாட்டில் எந்த வகையான கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன என்பதைப் பொருத்து அடுத்த அலையின் தீவிரம் இருக்கும் எனக் கூறியுள்ளாா்.

இருப்பினும், அமலில் உள்ள கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக, ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளைவிட சிங்கப்பூரில் ஒமைக்ரான் பரவல் வேகம் மெதுவாகவே இருக்கும் என வேறு சில நிபுணா்கள் கூறியுள்ளனா்.

60 லட்சம் மக்கள்தொகை கொண்ட சிங்கப்பூரில் 90 சதவீதம் போ் இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா். ஒவ்வொரு 10 பேரில் 5 போ் பூஸ்டா் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா். அப்படியிருந்தும் ஒமைக்ரான் வகை தொற்று அதிகரித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளா் நியமனம்: துணை வேந்தா் விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

SCROLL FOR NEXT