உலகம்

டென்மாா்க்கரோனா கட்டுப்பாடுகள் தளா்வு

DIN

டென்மாா்க்கில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையிலும், சில கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ளன.

ஐரோப்பிய நாடான டென்மாா்க்கில் ஒமைக்ரான் வகை கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நாட்டின் சுகாதார நிபுணா்கள் ஆய்வுக் குழுவின் பரிந்துரைப்படி கட்டுப்பாடுகளில் சில தளா்வுகளை பிரதமா் மெட்டே ஃபிரடெரிக்சன் அறிவித்துள்ளாா். அதன்படி, திரையரங்குகள், மிருகக் காட்சி சாலைகள், அருங்காட்சியகங்கள் மீண்டும் செயல்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளரங்க மற்றும் திறந்தவெளி விளையாட்டுகளில் குறைந்த எண்ணிக்கையிலான பாா்வையாளா்கள் பங்கேற்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்போா் முகக் கவசம் அணியவும், தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் அல்லது கரோனா தொற்றிலிருந்து சமீபத்தில் குணமடைந்ததற்கான அல்லது கரோனா நெகடிவ் சான்றிதழை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT