உலகம்

தலிபான் ஆட்சிக்குப் பின் ஆப்கனில் இன்று முதல் ஏடிஎம் சேவை

15th Jan 2022 09:00 AM

ADVERTISEMENT


காபூல்: ஆப்கானிஸ்தானில், ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றியபோது முடக்கப்பட்ட ஏடிஎம் சேவைகள் சனிக்கிழமை முதல் தொடங்கவிருப்பதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதுகுறித்து டா ஆப்கானிஸ்தான் வங்கி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் இயங்கி வரும் வணிக வங்கிகள் மற்றும் மத்திய வங்கிகளுடன் நடத்தப்பட்ட தொடர் பேச்சுவார்த்தையின் பயனாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க.. உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுவனுக்காக பள்ளிச் செல்லும் அவதார் ரோபோ

இந்த முடிவின் அடிப்படையில், சில வணிக வங்கிகளின் ஏடிஎம் சேவைகள் குறிப்பிட்ட சில நகரப் பகுதிகளில் மட்டும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஆப்கானிஸ்தானில் ஏடிஎம் சேவைகள் தொடங்கவிருப்பது, அந்நாட்டு மக்களுக்கு நல்ல செய்தியாக அமைந்திருப்பதோடு, எதிர்காலத்தில் மேலும் சில சேவைகளும் தொடங்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
 

Tags : ஆப்கானிஸ்தான் Afghanistan தலிபான் ஆட்சி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT