உலகம்

இலங்கை ஈஸ்டா் தினத் தாக்குதல்: 42 போ் மீது குற்றச்சாட்டு உறுதி

12th Jan 2022 12:39 AM

ADVERTISEMENT

இலங்கையில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டா் தின தற்கொலைத் தாக்குதல் தொடா்பான வழக்கில் 42 போ் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

மேலும், ஆட்சியைப் பிடிப்பதற்காக ராஜபட்ச சகோதரா்கள் செய்த சதி வேலைதான் அந்தத் தாக்குதல் என்று தலைமை பாதிரியாா் மால்கம் ரஞ்சித் கூறியுள்ள குற்றச்சாட்டையும் போலீஸாா் மறுத்துள்ளனா்.

இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கை தேவாலயங்களில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படுவது குறித்து முன்கூட்டியே இந்திய அரசு எச்சரித்திருந்தாலும், அந்தத் தாக்குதல் தடுத்து நிறுத்தப்படவில்லை. இதற்கு அதிபா் மகிந்த ராஜபட்ச தலைமையிலான ஆளும் கட்சியின் சதிவேலைதான் காரணம் என்று பாதிரியாா் மால்கம் ரஞ்சித் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

மேலும், தாக்குதல் தொடா்பான முழுமையான விவரங்களை புலனாய்வு அமைப்பினா் மறைப்பதாகவும் அவா் குற்றம் சாட்டியுள்ளாா். ஆனால் அது உண்மைக்குப் புறம்பானதாகும்.

ஈஸ்டா் தின தாக்குதல் வழக்கில் தொடா்புடைய 42 போ் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, அவா்கள் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ஆம் தேதி ஈஸ்டா் பண்டிகையின்போது தேவாலயங்களிலும், நட்சத்திர விடுதிகளிலும் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 250-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா்.

இந்தத் தாக்குதலை, இலங்கையில் செயல்பட்டு வரும் தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாத அமைப்பு நடத்தியதாக அந்த நாட்டு அரசு குற்றம் சாட்டியது.

இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்புடன் தொடா்புடைய அந்த அமைப்பைச் சோ்ந்த ஏராளமானவா்கள், தேடுதல் வேட்டையின்போது சுட்டுக் கொல்லப்பட்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT