உலகம்

கனடாவில் புதிய உச்சம்: ஒரேநாளில் 41,210 பேருக்கு கரோனா

1st Jan 2022 03:21 PM

ADVERTISEMENT

கனடாவில் புதிய உச்சமாக ஒரேநாளில் 41,210 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கனடாவில் ஒமைக்ரான் காரணமாக கடந்த சில வாரங்களாக கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இங்கு கடந்த 24 மணிநேரத்தில் புதிய உச்சமாக ஒரேநாளில் 41,210 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க- ஒமைக்ரானை எதிர்கொள்வது எப்படி? சௌமியா சுவாமிநாதன் பதில்

அதிகபட்சமாக அன்டாரியோ மாகாணத்தில் 16,713 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 21,83,527ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கரோனாவுக்கு 30,319 பேர் பலியாகியுள்ளனர். 

ADVERTISEMENT

கரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து கியூபெக்கில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களுக்கு 790 முதல் 4,740 அமெரிக்க டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT