இஸ்ரேலில் கரோனாவால் உடல்நல பாதிப்பு அபாயம் அதிகம் நிறைந்தவா்களுக்கு அந்த நோய்க்கு எதிரான 4-ஆவது தவணை தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கியது.
கரோனா தடுப்பூசி செலுத்துவதில் உலகளவில் இஸ்ரேல் முன்னணியில் உள்ளது. 93 லட்சம் மக்கள்தொகையில் 63 சதவீதம் போ் இரு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டுள்ளனா். 45 சதவீதம் போ் மூன்றாவது தவணையாக ஃபைசா்/பயோஎன்டெக் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா்.
எனினும், தற்போது அந்த நாட்டில் கரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த நோயால் உயிரிழக்கும் அபாயம் அதிகம் நிறைந்த மருத்துவப் பணியாளா்கள், வயதானவா்கள் உள்ளிட்டோருக்கு வியாழக்கிழமை முதல் 4-ஆவது தவணை தடுப்பூசி செலுத்தப்படுகிறது.