உலகம்

போர் பதற்றம்: உக்ரைனில் அவசர நிலை பிறப்பிக்க முடிவு

23rd Feb 2022 05:11 PM

ADVERTISEMENT

 

ரஷியப் படைகள் எந்நேரமும் தாக்குதல் நடத்தலாம் என்பதால் உக்ரைனில் அவசர நிலை பிறப்பிக்க பாதுகாப்பு கவுன்சில் முடிவு செய்துள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ படையில் உக்ரைனை அனுமதிக்கக் கூடாது எனவும் முன்னாள் சோவியத் நாடுகளில் இருந்து நேட்டோ படைகளைக் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி வரும் ரஷியா, உக்ரைன் எல்லையில் தனது படைகளைக் குவித்துள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இதனிடையே, கிழக்கு உக்ரைனில் கிளா்ச்சியாளா்களின் கட்டுப்பாட்டில் உள்ள இரு பிராந்தியங்களை சுதந்திரமான பகுதிகள் என்று ரஷியா கடந்த  திங்கள்கிழமை அறிவித்து அங்கீகாரம் வழங்கியது. இந்த நடவடிக்கையால், இருதரப்பிலும் பதற்றம் அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும், உக்ரைனில் வசிக்கும் இந்தியர்களும் பத்திரமாக விமானங்கள் மூலம் இந்தியா திரும்பி வரும் வேளையில் இன்று ரஷியப் படைகள் எப்போது வேண்டுமானாலும் திடீர் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக உக்ரைன் அரசு அறிவித்த்துடன் அடுத்த 30 நாள்களுக்கு அவசர நிலையைப் பிறப்பிக்க பாதுகாப்புக் கவுன்சில் முடிவு செய்துள்ளது. 

இதனால், உக்ரைன் மக்கள் ரஷியாவிற்கு  பயணம் மேற்கொள்ளக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதனால், உக்ரைன் மக்கள் பெரும் பதற்றத்தில் உள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT