உலகம்

பிரேசில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 146 ஆக உயர்வு

20th Feb 2022 12:08 PM

ADVERTISEMENT

பிரேசில்: பிரேசிலில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளது. 

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் உள்ள பெட்ரோபோலிஸ் நகரில் செவ்வாய்கிழமை ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாவது நாளாக நீடித்து வரும் நிலையில், சனிக்கிழமை 146 ஆக உயர்ந்துள்ளது. காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 191 ஆக உள்ளது, செவ்வாய்கிழமை முதல் 24 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்கிழமை ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டு மண் மலைகளுக்கு அடியில் சிக்கியுள்ளவர்களைக் கண்டுபிடிக்கும் பணிகள் அதிக மழை மற்றும் மண்சரிவு காரணமாக சனிக்கிழமை தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

வெள்ளத்தின்போது பல மலைகள் சரிந்து, வீடுகள் மற்றும் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன, குடியிருப்பாளர்கள் காணாமல் போனவர்களைத் தேடுவதற்காக குவியலாக சேர்ந்துள்ள சேற்றைத் தோண்டிக்கொண்டே இருக்கிறார்கள்.

ADVERTISEMENT

உயிர் பிழைத்தவர்களைத் தேடுவதற்காக, நாட்டின் சுமார் 14 மாகாணங்களில் இருந்து கண்காணிப்பு நாய்களும், மீட்புக் குழுக்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT