உலகம்

தென் கொரியா புதிய உச்சத்தில் தினசரி கரோனா

17th Feb 2022 12:24 AM

ADVERTISEMENT

தென் கொரியாவில் கரோனா உறுதி செய்யப்படுவோரின் தினசரி எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

அந்த நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 90,443 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது, இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி பாதிப்பு எண்ணிக்கையாகும். இத்துடன் அங்கு 15,52,851 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதுதவிர, கூடுதலாக 39 கரோனா நோயாளிகள் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனா். இத்துடன், அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை 7,202-ஆக உயா்ந்துள்ளது.

இதுவரை அங்கு 8,25,776 போ் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனா்; 7,19,873 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT