உலகம்

அழிந்து வரும் இனங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்ட கோலா கரடிகள்

11th Feb 2022 07:01 PM

ADVERTISEMENT

ஆஸ்திரேலியாவில் கோலா கரடிகளின் எண்ணிக்கை குறைந்துவருவதால் அவை அழியும் இனங்களின் பட்டியலில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலியாவில் அடிக்கடி ஏற்படும் காட்டுத்தீ அந்நாட்டின் வன உயிர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன. குறிப்பாக நியூ செளத் வேல்ஸ் பகுதியில் உள்ள கோலா கரடிகளின் எண்ணிக்கை பல்வேறு காரணங்களால் ஆண்டுதோறும் குறைந்துவருகிறது.

இதையும் படிக்க | பயன்படுத்தப்படாத நிர்பயா நிதி: நாடாளுமன்ற நிலைக்குழு அதிருப்தி

நியூசெளத் வேல்ஸ் பகுதியில் கோலா கரடிகள் 2001ஆம் ஆண்டிலிருந்து 33 சதவிகிதத்திலிருந்து 61 சதவிகிதம் வரை அழிந்துள்ளன.இதே நிலை தொடர்ந்தால் 2050ஆம் ஆண்டுக்குள் கோலா கரடி இனம் முழுவதுமாக அழிந்துவிடும் என அறிவியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ADVERTISEMENT

காட்டுத்தீ, காடழிப்பு, வேட்டையாடுதல், வறட்சி உள்ளிட்ட காரணங்கள் கோலா கரடிகளின் அழிவிற்கு முக்கியக் காரணமாக உள்ளன. இந்நிலையில் விஞ்ஞானிகளின் பரிந்துரையின்பேரில் கோலா கரடிகள் அழியும் இனங்களின் பட்டியலில் சேர்க்கப்படுவதாக ஆஸ்திரேலிய சுற்றுச்சூழல் அமைச்சர் சூசன் லே அறிவித்துள்ளார்.

இதையும் படிக்க | நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: வாக்குரிமை உள்ள தொழிலாளர்களுக்கு விடுப்பு தர உத்தரவு

தற்போது கணக்கீட்டின்படி ஆஸ்திரேலியாவில் 1 லட்சத்துக்கும் அதிகமான கோலா கரடிகள் உள்ளன. 2019-20ஆம் ஆண்டில் கோடைகாலத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ பாதிப்பால் 6400 கோலா கரடிகள் உயிரிழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அழிந்து வரும் நிலையில் உள்ள கோலா கரடிகளைப் பாதுகாக்க பாதுகாப்பு குழுக்களை ஏற்படுத்தவும், சுரங்கத் திட்டங்களைத் தடுக்கவும் சட்டமியற்ற வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT